அய்லான் போன்று மேலுமொரு சிறுவன் கிரீஸுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்ததில் பலி

அய்லான் போன்று மேலுமொரு சிறுவன் கிரீஸுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்ததில் பலி

அய்லான் போன்று மேலுமொரு சிறுவன் கிரீஸுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்ததில் பலி

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 6:19 am

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மக்கள் உயிர் பிழைப்பதற்காக துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து, அதில் பலியான அய்லான் என்ற 3 வயது குழந்தையின் உடல், கரைக்கு அடித்துச்செல்லப்பட்டிருந்த காட்சி உலகையே உலுக்கியது.

அதேபோன்ற சோகம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. ஒரு ரப்பர் படகில் 40 அகதிகள் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் அகதோனிசி தீவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கடும் சூறாவளியில் சிக்கி அந்த படகு கவிழ்ந்தது.

மற்றொரு படகில் வந்த மீனவர்கள், அதைகண்டு எழுப்பிய அபாய ஒலியால், படகில் இருந்து விழுந்தவர்களில் 39 பேர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆனால் 2 வயது ஆண் குழந்தை ஒன்று, கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த புத்தாண்டில் பலியான முதல் அகதி என்ற பெயர் அந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது.

அந்த குழந்தையின் உடல், மீனவர்களால் மீட்கப்பட்டது. ஆனால் அதன் தாய் உயிருடன் மீட்கப்பட்டு விட்டார். தான் மீட்கப்பட்டபோதும், குழந்தை பலியானது அந்த தாய்க்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்