அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 8:10 pm

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களின் படகை குறித்த ட்ரோலர் படகு சேதப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இந்திய மீனவர்கள் 08 பேர் மற்றும் அவர்களின் ட்ரோலர் படகும் பொலிஸார் மற்றும் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என தமிழக பாண்டிச்சேரி மீனவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என் ஜே போஸ் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்