அடுத்த கட்ட அபிவிருத்தித் திட்டம் குறித்து பிரதமர் விளக்கம்

அடுத்த கட்ட அபிவிருத்தித் திட்டம் குறித்து பிரதமர் விளக்கம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 8:32 pm

அலரி மாளிகையில் புது வருடத்தில் இன்று கடமைகளை ஆரம்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர்…

[quote]ஜனவரி 8 ஆம் திகதி இந்த மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டில் புதியதொரு பயணம் ஆரம்பமானது. இந்த நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் குறைப்பதற்கு ஜனாதிபதி தனது விருப்பத்தை தெரிவித்தார். சர்வதேச மட்டத்தில் நாம் எதிர்கொண்ட மனித உரிமைப் பிரச்சினைகளை வெற்றி கொண்டு அவர்களை எம்முடன் இணைத்துக் கொண்டு எமது உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கில் பெரும் சிரமங்களை துன்பங்களை எதிர்கொண்ட மக்களை அவர்களது காணிகளில் குடியமர்த்திவருவதுடன்,ஏனைய பிரதேச மக்களது உரிமைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதே போன்று நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான மூன்று வருட திட்டத்தை ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கவுள்ளொம்.[/quote]

புது வருடத்தில் கடமைகளை ஆரம்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலுவலக உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்