2015 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்  வௌியானது

2015 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியானது

2015 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியானது

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2016 | 7:23 am

2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk இல் பார்வையிட முடியும் என உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பட்டுள்ளார்.

மேலும்,பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகளுக்காக தொலைபேசி இலக்கங்களையும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 0112 784 208 , 0112 784 537 , 0113 188 350 மற்றும் 0113 140 314 ஆகிய இலக்கங்களினூடாக மேலதிக விசாரணைகளை முன்வைக்க முடியும் என உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள்திருத்த விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன

இதற்கமைய பெறுபேறுகளில் திருப்தி இல்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்