நுவரெலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

நுவரெலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

நுவரெலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2016 | 12:46 pm

நுவரெலியா ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் மஞ்சள் கடவையினூடாக வீதியை கடக்க முயற்சித்த பெண் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த பெண் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]sfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்