ஏறாவூரில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

ஏறாவூரில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

ஏறாவூரில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2016 | 4:01 pm

மட்டக்களப்பு – ஏறாவூரில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் ஐயங்கேணி பகுதியை சேர்ந்த எஸ்.சேகர் என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்தார்.

வீட்டின் சுவரின் ஒருபகுதியை உடைத்து சிதைவுகளை துப்புரவு செய்துகொண்டிருந்த வேளையில் மற்றைய பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

இன்று (03) முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்