அங்குனகொல பெலஸ்ஸயில் 2 பேர் சுட்டுக் கொலை

அங்குனகொல பெலஸ்ஸயில் 2 பேர் சுட்டுக் கொலை

அங்குனகொல பெலஸ்ஸயில் 2 பேர் சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2016 | 9:30 am

அங்குனகொல பெலஸ்ஸ உஸ்வெவ பகுதியில் 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிலில் வந்த இருவரால் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு 10.25 அளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தொட்ட வைத்தியசாலைக்கு சடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்