வலிகாமத்தில் விடுவிக்கப்பட்ட பகுதியில் சித்திரவதைக்கூடங்கள்: எஸ்.சஜீவன் குற்றச்சாட்டு

வலிகாமத்தில் விடுவிக்கப்பட்ட பகுதியில் சித்திரவதைக்கூடங்கள்: எஸ்.சஜீவன் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2016 | 9:36 pm

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட வீமன் காமம் பகுதியில் சித்திரவதை முகாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு வீடுகள் காணப்படுவதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் எஸ்.சஜீவன் குறிப்பிட்டார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளை இன்று பார்வையிடச் சென்றிருந்த வேளை அவர் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை இராணுவத்தினரின் ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் வினவியபோது, வீமன் காமம் பகுதியில் சித்திரவதை முகாம் இருந்ததாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

சித்திரவதை முகாம்களை வைத்திருக்கும் தேவை இராணுவத்திற்கு இல்லை என பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்