பஞ்சாப்பிலுள்ள இந்திய விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

பஞ்சாப்பிலுள்ள இந்திய விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

பஞ்சாப்பிலுள்ள இந்திய விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2016 | 9:19 am

பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் ஷாக்கி ஆற்றுப்பகுதியிலுள்ள விமானப் படை தளத்திற்கு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் அதிகாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால், தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படை வீரர்கள் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இராணுவ உடையில் வந்து தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. வேறு எந்த தீவிரவாதிகளும் பதுங்கி இருக்கிறார்களா? என கண்டறிய ஹெலிகொப்ட்டர் மூலமாக பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானம் மற்றும் ஹெலிகொப்ட்டர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் விமான படை அலுவலகத்தில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்