நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி

நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி

நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2016 | 4:05 pm

எகிப்தின் நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்திற்குள்ளான படகு கப்ர் எல்-ஷெர் ஷெயிக் மற்றும் பெஹிர ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தது.

தலைநகர் கைரோவின் வடக்கு பகுதியில் இருந்து 1470 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கப்ர் எல்-ஷெய்க் மாகாணத்தில் இந்த படகு விபத்து ஏற்பட்டுள்ளது.

படகில் சுமார் 22 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற படகு விபத்தில் 31 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்