துபாயில் நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

துபாயில் நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

துபாயில் நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2016 | 7:52 am

துபாயில் 63 மாடிகளைக்கொண்ட நட்சத்திர விடுதி கட்டடமொன்றில் பரவிய தீயினால் எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என டுபாயிலுள்ள இலங்கை கொன்சுலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தீ அனர்த்தத்தில் இலங்கையர்கள் எவரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து உடனடியாக தேடிப் பார்த்ததாக கொன்சுலர் ஜெனரல் சரித்த யத்தெனிகே குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டலில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும், அனர்த்தம் தொடர்பில் அறியக் கிடைத்தவுடனேயே அங்குள்ள இலங்கையர்கள் குறித்து தேடிப் பார்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் இந்த சம்பவம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக துபாயிலுள்ள இலங்கை கொன்சுலர் நாயகம் சரித்த யத்தெனிய கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்