சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2016 | 10:36 am

யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியின் 9 ஆம் கட்டைக்கு அருகில் தனங்கிழப்பு பகுதியில் நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நாவற்குழியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுடன் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

28 வயதான தனங்கிழப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்