சந்தையில் மரக்கறி விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

சந்தையில் மரக்கறி விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

சந்தையில் மரக்கறி விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2016 | 10:15 am

சந்தையில் மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த தாக அந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் கமநல விற்பனைப் பிரிவுத் தலைவர் துமிந்த பிரியதர்ஷன கூறினார்.

இதனால் மரக்கறி வகைகளின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் மாதத்தில் நிலவிய கடும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறி செய்கைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அவர், மேலும் இரண்டு வாரங்களுக்கு மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துக் காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், ஜனவரி மூன்றாம் வாரத்திலிருந்து மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடையும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உருளைக் கிழங்கு, பருப்பு, பயறு மற்றும் பெரிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவு வகைகளின் விலைகளும் சந்தையில் அதிகரித்தே காணப்படுவதாக சந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் கமநல விற்பனைப் பிரிவுத் தலைவர் தெதரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்