கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2016 | 8:05 am

கொழும்பு உள்ளிட்ட சன நெரிசல்மிக்க பிரதேசங்களில் அதிக சன நடமாட்டம் காணப்படுவதால் ஜனவரி 4 ஆம் திகதி வரையில் வீதிகளில் வாகன நெரிசல் நிலவும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வாகன நெரிசலை குறைப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இதற்கமைய வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்கான திட்டங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அத்துடன் சகல பிரதேசங்களிலும் ஒழுங்கைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் விசேட பணிப்புரையை விடுத்துள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன் பிரகாரம் பொலிஸ் ரோந்து சேவைகள், மோட்டார் சைக்கிள் கண்காணிப்புகள் என்பவற்றுடன் முக்கிய இடங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்