கல்கிஸ்ஸயில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு இருவரை காணவில்லை

கல்கிஸ்ஸயில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு இருவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2016 | 12:15 pm

கல்கிஸ்ஸ கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2 பேர் காணாமற்போயுள்ளனர்.

கடலில் குளிப்பதற்காக சென்றிருந்த இளைஞர்கள் சிலரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

லிந்துலை மற்றும் கொழும்பு ஜம்பட்டா வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி காணமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்