கடந்த வருடத்தில் பேஸ்புக் தொடர்பில் 2,800 முறைப்பாடுகள் பதிவு

கடந்த வருடத்தில் பேஸ்புக் தொடர்பில் 2,800 முறைப்பாடுகள் பதிவு

கடந்த வருடத்தில் பேஸ்புக் தொடர்பில் 2,800 முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2016 | 8:15 am

கடந்த வருடத்தில் சமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்பில் 2,800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டார்.

தமது பெயர்களில் வேறு நபர்கள் கணக்குகளை வைத்திருப்பதாக தமக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து பேஸ்புக் இணையத்தளத்திற்கு நேரடியாக முறைப்பாடுகளை தெரிவிப்பதன் மூலம், உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கணனி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் தெரிவித்தார்.

அறிமுகமில்லாத நபர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக இணைத்துக்கொள்வதை தவிர்க்குமாறும் அவர் அறவுரை விடுத்துள்ளார்.

011 2691 692 / 011 2679 888 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அல்லது,
011 2691 064 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அறிவிப்பதன் மூலமும் அல்லது,
sl cert @ cert dot gov dot lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்