உணவு விஷமானதால் 300 இற்கும் அதிகமான  ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதால் 300 இற்கும் அதிகமான  ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2016 | 1:25 pm

உணவு விஷமடைந்ததன் காரணமாக திடீர் சுகவீனமுற்ற ஆடைத் தொழிற்சாலையொன்றின் 300 இற்கும் அதிகமான ஊழியர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்தி, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து, இதனை உணவு விஷமடைந்தமையால் ஏற்பட்ட சுகவீனமாக இருக்கலாம் என நம்புவதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் டி.எம்.சீ. தசநாயக்க தெரிவித்தார்.

ஆயினும், ஊழியர்களின் நிலைமை பாரதூரமானதாக இல்லையென சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டார்.

உணவு விஷமடைந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்