யாழில் நிலக்கீழ் நீருடன் கலக்கும் கடல் நீரின் அளவு அதிகரிப்பு

யாழில் நிலக்கீழ் நீருடன் கலக்கும் கடல் நீரின் அளவு அதிகரிப்பு

யாழில் நிலக்கீழ் நீருடன் கலக்கும் கடல் நீரின் அளவு அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2016 | 12:58 pm

யாழ். குடாநாட்டின் நிலக்கீழ் நீருடன் கலக்கும் கடல் நீரின் அளவு அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் குடிநீர் மாசடைந்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் தொடர்பான முன்னாள் பேராசிரியர் செனவி எப்பிட்டவத்த குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நிலத்திற்கு அடியிலுள்ள சுன்னக் கற்பாறைகள் கரைவதனால் கடல் நீர் நிலத்தினுள் கசியும் தன்மையும் அதிகரிக்கும்மென பேராசிரியர் கூறினார்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்வரும் 8 வருடங்களில் யாழ். குடாநாட்டிலுள்ள நீரை அருந்த முடியாதநிலை ஏற்படும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்காக மழை நீரைப் பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்