மருதானையில் பஸ் விபத்திற்குள்ளானதில் 13 பேர் காயம்

மருதானையில் பஸ் விபத்திற்குள்ளானதில் 13 பேர் காயம்

மருதானையில் பஸ் விபத்திற்குள்ளானதில் 13 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2016 | 11:59 am

மருதானை – பஞ்சிகாவத்தை சந்தியில் பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கம்பஹாவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும், கொழும்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும் இன்று (01) அதிகாலை நேருக்குநேர் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்