பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் புது வருட வாழ்த்துச் செய்திகள்

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் புது வருட வாழ்த்துச் செய்திகள்

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2016 | 8:37 pm

புது வருடப்பிறப்பை முன்னிட்டு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

மனித கௌரவத்தைப் பாதுகாக்கும் நிலையான அபிவிருத்தியை அடைந்த ஒரு தேசமாக இலங்கையை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு புதுவருடத்தில் உள்ள பாரிய சவாலாகும் என தமது புதுவருட செய்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதியதொரு அரசியல் கலாசாரம் இன்று அனைவர் முன்னாலும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன, மத, கட்சி பேதங்களை ஒதுக்கி தேசத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டிய காலம் கனிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் பல்லின மக்களின் இன, மத, மொழி, சமய, கலாசார மற்றும் ஏனைய தனித்துவமான பண்புகளை மதிப்பதன் ஊடாக ஏற்படுகின்ற ஒற்றுமையைப் பேணுவதன் மூலமே வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தமது புதுவருட செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுவந்திருக்கும் இந்த புதுவருடத்தில் இலங்கை மக்கள் அனைவருக்கும் இது ஒரு வளம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமையவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் வாழ்த்தியுள்ளார்.

இலங்கைவாழ் பல்லின சமூகங்கள் தமது வேறுபாடுகளைக் களைந்து மக்களின் உரிமைகளையும் மனித நேயத்தையும், சுதந்திரத்தையும், நல்வாழ்வையும் மதித்து பாதுகாக்கின்ற பிளவுபடாத ஒன்றுபட்ட ஒரு நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தமது புதுவருட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்