பஸ்கள் மீதான கல்வீச்சைக் கண்டித்து வடபிராந்திய டிப்போ ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

பஸ்கள் மீதான கல்வீச்சைக் கண்டித்து வடபிராந்திய டிப்போ ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2016 | 8:01 pm

இலங்கைப் போக்குவரத்துச் சபையின், வடபிராந்திய டிப்போ ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 11 மணி முதல் பிறபகல் ஒரு மணி வரையான காலப்பகுதியில் டிப்போ ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து – திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மீது வியாழக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பிரதான பஸ் நிலையத்திலிருந்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு டிப்போ ஊழியர்கள் பேரணியாக சென்று கவனயீர்ப்புப் பேராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் வடக்கில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மீது 57 தடவைகள் கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக டிப்போ ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பஸ்கள் மீதான கல்வீச்சைக் கண்டித்து நேற்றைய தினம் வவுனியா டிப்போ ஊழியர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்