சுந்திரமாக வாழக்கூடிய ஆண்டாக அமையட்டும்: வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

சுந்திரமாக வாழக்கூடிய ஆண்டாக அமையட்டும்: வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2016 | 9:24 pm

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது;

[quote]முதலில் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் இந்த புது வருடத்தில் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக அமையட்டும். எமது இந்த அழகான எழில்மிகு மகத்தான தாய்நாட்டை உலகின் சிறந்த நாடாக மாற்றவும் உங்கள் அனைவரது வாழ்க்கையையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக மாற்றவும் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்குவதற்கும் புத்தாண்டில் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறேன். ஆகவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடமைகளை நிறைவேற்றுவோம். அனைவருக்கும் மலர்ந்துள்ள புத்தாண்டு மிகவும் சிறந்த, சுந்திரமாக வாழக்கூடிய ஆண்டாக அமையட்டும் என வாழ்த்துகின்றேன்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்