இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறும் – தயாசிறி ஜயசேகர

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறும் – தயாசிறி ஜயசேகர

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2016 | 2:06 pm

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டவாறு நாளை மறுதினம் (03) காலை 10 மணிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடத்தவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தேர்தல் குறித்து தெளிவுபடுத்துவதற்கான ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் தேர்தலை இன்னும் இரண்டு நாட்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மூன்றாம் திகதி காலை 9 மணிக்கு அனைவரும் சமூகமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உரிய நேரத்திற்கு தேர்தல் ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் எவரும் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அழைத்துவர முடியாது எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

மேலும் துப்பாக்கி மற்றும் கையடக்கத் தொலைப்பேசிகளை தேர்தல் நடைபெறும் மண்டபத்திற்குள் எடுத்துவரக் கூடாது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்