தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

எழுத்தாளர் Bella Dalima

31 Dec, 2015 | 10:19 pm

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த சந்திப்பில் வருடத்தின் முதல் 9 மாதங்களில் பொருளாதாரம் 5.2 வீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்த வருடத்தில் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பதே மத்திய வங்கியின் எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை, வணிக வங்கிகள் மத்திய வங்கியில் பேண வேண்டிய யாப்பு ரீதியான கையிருப்பு விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கு நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கமளித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்