வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 7:17 am

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வைத்தியசாலைகளில் இரு வைத்தியர்கள் இருக்க வேண்டுமென்ற போதிலும் அநேகமான சந்தரப்பங்களில் ஒரு வைத்தியரே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்தார்.

எனவே குறித்த வைத்தியசாலைகளுக்கு மேலுமொரு வைத்தியர் வீதம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

இதன் கீழ் மூதூர்,கிண்ணியா,பருத்தித்துறை,வெல்லவாய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்