மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 8:43 am

மேல் மாகணத்தில் கழிவுப் பொருட்கள் தொடர்பில் போதிய முகாமைத்துவம் அற்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய அபாயமுள்ளதாக மேல்மாகண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நுகேகொடை,மொரட்டுவை,கொலன்னாவ,தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் அதிகளவில் டெங்குக் காய்ச்சல் பரவியுள்ளதை அவதானிக்க முடியுமென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தீப்தி பெரேரா கூறினார்.

சுகதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் குறித்து சோதனை செய்யும் சந்தரப்பங்களில் மக்கள் தமது குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலும் கைவிடப்பட்ட இடங்கள்,பாழடைந்த கட்டடங்கள் மற்றும் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் மக்கள் கழிவுப்பொருட்களை கொட்டுவதால் அவை அகற்றப்படாமல் டெங்கு நுளம்புப் பெருக்கத்திற்கு வழி வகுப்பதாக மேல்மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்