மனமுருகி மன்னிப்புக் கோரிய மொகமட் அமீர்: ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள்

மனமுருகி மன்னிப்புக் கோரிய மொகமட் அமீர்: ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள்

மனமுருகி மன்னிப்புக் கோரிய மொகமட் அமீர்: ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள்

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 3:45 pm

பாகிஸ்தான் அணிக்காக ஆடும் தகுதி தனக்கில்லையென மற்ற வீரர்கள் நினைத்தால் அணியை விட்டு விலகிவிடுகின்றேன் என பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமட் அமீர் உருக்கத்துடன் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்த வீரர்கள் மனமிறங்கி அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்பொட் பிக்சிங் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத் தண்டனை, தடை உத்தரவுகளைக் கடந்து வந்துள்ள அமீர், மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதை மொகமது ஹபீஸ், அசார் அலி ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர்.

இந்நிலையில், தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் மற்றும் அணித்தேர்வுக்குழு தலைவர் ஹரூண் ரஷீத் ஆகியோர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் மொகமது அமீரை பேச வைத்தனர்.

இதன்போது, அமீர் மனமுருகி மன்னிப்புக் கோரியதும் ஹபீஸ் அவரைக் கட்டியணைத்து மன்னித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் தயாரித்துள்ள வீரர்கள் ஒப்பந்தத்தில், அமீர் அல்லது ஸ்பொட் பிக்சிங் விவகாரத்தில் தண்டனை அனுபவித்த வீரர்களுடன் விளையாட எந்த வீரரும் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது என்றும் அப்படி விளையாட மறுத்தால் 20 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்