மக்களின் கருத்தைக் கேட்டறிந்து தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும் – ரில்வின் சில்வா

மக்களின் கருத்தைக் கேட்டறிந்து தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும் – ரில்வின் சில்வா

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 7:02 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இன்று தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது.

பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு வருடத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அதனை மீண்டும் பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களை நடத்திச் செல்வது தொடர்பில் அரசாங்கத்திற்கு தனியான நிலைப்பாடு இல்லை என குறிப்பிட்ட ரில்வின் சில்வா, அரசாங்கம் இது தொடர்பில் பல்வேறுபட்ட நிலைப்பாட்டிலுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு புதிய முறைமை ஏற்புடையதாக இல்லாவிட்டால் மக்களின் கருத்தைக் கேட்டறிந்து தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போதுள்ள முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதே சிறந்தது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்