பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 8:27 am

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
 
பஸ் மற்றும் ரயில்களின் ஊடாக பயணிகள் போக்குவரத்தை முன்னெடுப்பதன் ஊடாக போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என அமைச்சின் செயலாளர் எஸ். சோமவீர தெரிவித்துள்ளார்.
 
அதிகளவிலான பயணிகள் போக்குவரத்திற்காக ரயில் சேவைகளை நாடும் போதிலும், போதியளவு ரயில் பெட்டிகள் இன்மையால் அவர்களுக்கான சேவைகளை முறையாக வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.
 
அதனால் மலையக ரயில் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக புதிதாக 20 ரயில் என்ஜின்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மைச்சின் செயலாளர் எஸ். சோமவீர குறிப்பிட்டார்.
 
அத்துடன் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் வாகன தரிப்பிடமொன்றை அமைத்து, வாகனங்களை அங்கு நிறுத்தி வைத்து கொழும்பிற்கு கடமைகளுக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்