பருத்தித்துறையில் படகு கவிழ்ந்தது: இரண்டாமவரின் சடலமும் கரையொதுங்கியது

பருத்தித்துறையில் படகு கவிழ்ந்தது: இரண்டாமவரின் சடலமும் கரையொதுங்கியது

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 6:40 pm

பருத்தித்துறை முனை கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் நேற்று கரையொதுங்கியிருந்த நிலையில், மற்றுமொருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.

கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களில் ஒருவரின் சடலம் நேற்று கரையொதுங்கியிருந்ததுடன், மற்றைய ஒருவர் காணாமற்போயிருந்தார். ஒருவர் நீந்திக் கரைக்குத் திரும்பியிருந்தார்.

காணாமற்போன மீனவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,
அவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 34 மற்றும் 38 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று கரையொதுங்கிய பருத்தித்துறையைச் சேர்ந்த அலோசியஸ் அன்ரனின் சடலம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

நேற்று (28) காலை கடலுக்குச் சென்ற 3 மீனவர்களின் படகே கடும் காற்று காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்