தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 5:45 pm

இரட்டைக் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் உட்பட இருவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் பூபாலப்பிள்ளை ஹரிதாஸ் ஆகியோர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் பூபாலப்பிள்ளை ஹரிதாஸ் ஆகியோர் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இரண்டு சந்தேகநபர்களையும் அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

இந்த கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இரண்டு சந்தேகநபர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்