சுத்தமான தண்ணீரில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள்

சுத்தமான தண்ணீரில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள்

சுத்தமான தண்ணீரில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 10:24 am

நாம் குடிக்கும் ஒரு கோப்பை சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பக்டீரியா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட தெற்கு சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவு பற்றி கூறும்போது, “புதிய தொழில்நுட்பங்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். அவைதான் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிய உதவியுள்ளன.

நம் உடலில் உள்ளது போல் தண்ணீரில் உள்ள பக்டீரியாக்கள் அந்த நீரை சுத்தம் செய்து குடிக்க ஏதுவாக மாற்றுகின்றன. இயந்திரங்கள் மட்டும் குடிநீரை சுத்திகரிக்கவில்லை. அதிகளவில் குடிநீர் குழாய்களில் இருக்கும் இந்த பக்டீரியாக்கள் குடிநீரை தூய்மைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த பக்டீரியாக்களை செயற்கை முறையில் வளர்ப்பதன் மூலம் குடிநீரை தூய்மையாக்க முடியுமா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்