எஜமானருக்காக 9 ஆண்டுகளாய்க் காத்திருந்த நாய்; 80 ஆண்டுகளாய் ஜப்பானில் சிலை! (Photos)

எஜமானருக்காக 9 ஆண்டுகளாய்க் காத்திருந்த நாய்; 80 ஆண்டுகளாய் ஜப்பானில் சிலை! (Photos)

எஜமானருக்காக 9 ஆண்டுகளாய்க் காத்திருந்த நாய்; 80 ஆண்டுகளாய் ஜப்பானில் சிலை! (Photos)

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 4:39 pm

டோக்கியோவின் ஷிபுயா ரயில் நிலைய வாயிலில் வெண்கலத்தால் ஆன நாயின் சிலை ஒன்று சுமார் 80 ஆண்டுகளாக உள்ளது.

இந்த நாயின் சிலை அருகே வந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்பவர்கள் அதன் பெருமையைப் பேசிக்கொள்ள மறப்பதில்லையாம்.

p1020107

1923 ஆம் ஆண்டு தனியாக நின்றுகொண்டிருந்த நாயொன்றை பேராசிரியர் யுனோ எடுத்து வளர்த்துள்ளார். அதற்கு ஹச்சிகோ என்று பெயரிட்டுள்ளார்.

ஹச்சிக்கோ அந்த பேராசிரியர் மீது அளவற்ற பிரியம் வைத்திருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் பேராசிரியருடன் ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பி வைக்கும் ஹச்சிக்கோ.

Hachiko Akita (4)

மாலை அவர் திரும்பும் நேரம் வரையில் அவருக்காக ரயில் நிலையத்திலேயே காத்திருக்கும்.

ஒரு நாள் பேராசிரியர் யுனோ திரும்பி வரவே இல்லை. அவருக்குத் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

ஆனால், அதையறியாத ஹச்சிக்கோ, தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையம் சென்று தனது எஜமானரின் வருகைக்காக காத்திருந்தது.

இந்த விடயம் ஊடகங்கள் மூலம் ஜப்பான் முழுதும் பரவியது. நாயின் கதையைக் கேட்ட ஜப்பானியர்கள் கண்கலங்கியதுடன், அந்த ரயில் நிலைய வாயிலில் ஹச்சிக்கோவின் சிலை ஒன்றையும் நிறுவினர்.

07_dogs-of-note7-001

நன்றி விசுவாசத்திற்கு உதாரணமான ஹச்சிக்கோவின் கதை சிறுவர்களுக்கு பாடமாகியது.

சிலை வைத்து ஓராண்டில் (1935) ஹச்சிக்கோ மரணமடைந்தது.

screen-shot-2013-12-06-at-4-15-10-am

1948 ஆம் ஆண்டு இந்த வெண்கலச் சிலையை மீண்டும் ஜப்பானியர் அதே இடத்தில் நிறுவினர்.

1679014-hachiko200505_2

ஹச்சிக்கோ உலகை விட்டுச் சென்று 80 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் ஜப்பானிய மக்களிடம் அதன் செல்வாக்கு குறையவே இல்லை.

ஹச்சிக்கோவின் சிலை அந்நாட்டின் தேசிய நூதன சாலையிலும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hachiko_in_National_Museum_of_Nature_and_Science

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்