இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 1:43 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் நேற்று (28) முதல் பாண்டிச்சேரியில் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 08 ஆம் திகதி பருத்தித்துறை கிழக்குக் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்டையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 8 பேர் மற்றும் நாகப்பட்டிணத்தைச் சேர்நத இரு மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் போது 65 வயதான பெண்ணொருவர் தீக்குளிக்க முற்பட்டுள்ளதாகவும் த ஹிந்து வெளிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

குறித்த 10 மீனவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை பாண்டிச்சேரி அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பில் பாண்டிச்சேரி அரசாங்கம் எந்த வித அக்கறையுமின்றி செயற்படுவதாக மீனவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்