அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்வதற்காக ஏலம்

அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்வதற்காக ஏலம்

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 8:47 pm

திறைசேரி முறிகள் ஊடாக 13 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்குக் கடனாகப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நடைபெற்ற ஏலத்திலிருந்த எந்தவொரு தொகையையும் பெற்றுக்கொள்ளாதிருக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மூன்று வருடங்கள் – 10 மாதங்கள், 5 வருடங்கள் – 10 மாதங்கள் மற்றும் 12 வருடங்கள் – 8 மாதங்களில் காலாவதியாகும் வகையில் 13 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக அறிக்கையொன்றின் மூலம் மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

இதன்பொருட்டு 33 பில்லியன் ரூபாவுக்கான கோரிக்கை மனுக்கள் கிடைத்திருந்த போதிலும், அவற்றுள் எந்தவொரு தொகையையும் மத்திய வங்கி பெற்றுக்கொள்ளாமை விசேட அம்சமாகும்.

இதேவேளை, கோரிக்கை மனு கோராமல் மத்திய வங்கி 50 பில்லியன் ரூபாவுக்கான முறிகளை விநியோகித்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

2020 இல் காலாவதியாகும் வகையிலான முறிகள் விநியோகத்தின்போது இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்துகொள்வதற்காக மத்திய வங்கியுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்