ஜனவரி முதல் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு தடை

ஜனவரி முதல் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு தடை

ஜனவரி முதல் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2015 | 12:29 pm

அடுத்த வருடம் ஜனவாரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனையை நாட்டிற்குள் தடை செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாரியளவில் இடம்பெறும் சூழல் மாசடைதலை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி கூறினார்.

மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீனினால் பாரியளவில் சூழ்ல் மாசடைவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பொலித்தீன் பாவனை குறித்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் மைக்ரோன் 20 இற்கு குறைவான பொலித்தீன் தயாரிப்பு, தம்வசம் வைத்திருத்தல்,விற்பனை மற்றும் பாவனை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி கூறினார்.

இந்த சுற்றிவளைப்புக்களின் போது கைது செய்யப்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்