வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2015 | 6:57 am

வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது வட மாகாணத்தின் படக்சான் பகுதி மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எதுவும் பதிவாகாத  நிலையில் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் 17 பேர் வரை காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பகுதியில் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பழைமையான வீடுகள் இந்த நிலநடுக்கத்தினால் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்