சீனாவில் வளி மாசடைதலுக்கு காரணமான 17,000 தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

சீனாவில் வளி மாசடைதலுக்கு காரணமான 17,000 தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

சீனாவில் வளி மாசடைதலுக்கு காரணமான 17,000 தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2015 | 12:29 pm

சீனாவில் வளி மாசடைவுக்கு காரணமான தொழிற்சாலைகளை மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சீனாவில் வளி மாசடைவு காரணமாக பல பகுதிகளில் அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

அத்துடன் பாதுபாப்பின் நிமித்தம் பாடசாலைகளும் மூடப்பட்ட நிலையில் வளி மாசடைவிற்கு காரணமான இரசாயன தொழிற்சாலைகள் , உலோக உருக்கு தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சீனாவிலுள்ள 17,000 தொழிற்சாலைகள் மூடப்படவுள்ளதுடன் சில தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறும் அரசினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்