சிவனொலிபாதமலை யாத்திரை பருவகாலம்: 2 நாட்களில் 50,000 இற்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகை

சிவனொலிபாதமலை யாத்திரை பருவகாலம்: 2 நாட்களில் 50,000 இற்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகை

சிவனொலிபாதமலை யாத்திரை பருவகாலம்: 2 நாட்களில் 50,000 இற்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகை

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2015 | 9:33 am

சிவனொலிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பமானதை அடுத்து, கடந்த 2 நாட்களில் 50,000 இற்கும் அதிகமான யாத்திரிகர்கள் தரிசனத்திற்காக சமூகமளித்துள்ளனர்.

சிவனொலிபாதமலைக்கு வருகை தரும் சகல யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிவனொலிபாதமலை மற்றும் பெல்மதுளை விஹாரைகளின் பொறுப்பதிகாரி தலகஸ்கந்தே வஜித தேர்ர் குறிப்பிட்டுள்ளார்.

பலாபத்வெல மற்றும் நல்லதண்ணி பகுதிகளில் இருந்து மலை உச்சிக்கு செல்லும் இருமருங்கிலும் யாத்திரிகர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டு வருவதாக தேர்ர் கூறியுள்ளார்.

சிவனொலிபாதமலை யாத்திரையில் ஈடுபடுகின்றவர்கள் பிரதேசத்தில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப ஆடைகளை அணிந்துவர வேண்டுமெனவும், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் என்பவற்றை எடுத்துவருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சிவனொலிபாதமலையைத் தரிசிப்பதற்காக வருகின்றவர்கள் மதுபானம் மற்றும் இசைக் கருவிகளை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதுடன், யாத்திரையின் மகத்துவத்தை பேணும் வகையில் ஒழுக்கமாகவும் நடத்துகொள்வது அவசியமாகும் என விஹாரைக்குப் பொறுப்பான தேர்ர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்