கடந்த 3 நாட்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகள் கைது

கடந்த 3 நாட்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகள் கைது

கடந்த 3 நாட்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகள் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2015 | 4:15 pm

கடந்த மூன்று நாட்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதியிலிருந்து இன்று (26) காலை வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 23 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரை 118 பேரும் , 24 ஆம் திகதியிலிருந்து 25 திகதி வரை மது போதையில் வானகம் செலுத்திய 83 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அத்துடன் நேற்றிலிருந்து இன்று காலை வரை மது போதையில் வாகனம் செலுத்திய 105 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்