கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2015 | 1:58 pm

கடந்த 24 மணித்தியாலங்களில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொக்கரெல்ல மற்றும் வென்னப்புவ பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி, விசுவமடு பகுதியில் நேற்று (25) மாலை 6.30 அளவில் மோட்டார் சைக்கிளொன்று உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலும், நேற்றிரவு 10.20 அளவில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டுவிலகி தண்ணீர் தாங்கியொன்றுடன் மோதுண்டதில் 25 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கொக்கரெல்ல பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளொன்று காருடன் மோதி விபத்திற்குள்ளானதில் 43 வயதான ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்