புதிய சம்பள திருத்தம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அரச நிர்வாக அமைச்சு தெரிவிப்பு

புதிய சம்பள திருத்தம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அரச நிர்வாக அமைச்சு தெரிவிப்பு

புதிய சம்பள திருத்தம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அரச நிர்வாக அமைச்சு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2015 | 8:17 am

புதிய சம்பள திருத்தம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அரச நிர்வாக அமைச்ச குறிப்பிட்டுள்ளது.

வரவு செலவுத்திட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கும் வகையில் புதிய சம்பளத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கொடுப்பனவுகளை சம்பளத்துடன் சேர்க்குமாறு நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள சம்பள சுற்றறிக்கையின் பின்னர் எந்தவிதமான சம்பளத் திருத்தங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும்போது கொடுப்பனவுகள் நீங்கலாக அவர்களின் அடிப்படை சம்பளத்தின் பிரகாரம் குறைந்தளவே ஓய்வூதியம் வழங்கப்படுவதால் இந்த பிரச்சினை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் கொடுப்பனவுகள் சம்பளத்துடன் சேர்க்கப்படும் வகையில் புதிய சம்பளத் திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்