ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வருடாந்தம் எய்ட்ஸ் பரிசோதனைக்காக 12,000 பேர் வருகை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வருடாந்தம் எய்ட்ஸ் பரிசோதனைக்காக 12,000 பேர் வருகை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வருடாந்தம் எய்ட்ஸ் பரிசோதனைக்காக 12,000 பேர் வருகை

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 4:50 pm

எய்ட்ஸ் பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வருடாந்தம் சுமார் 12,000 வைத்தியசாலைகளை நாடுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலுப்பு மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான மரணங்கள் பதிவாவதாகவும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக உடனடி வழிமுறைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹீபால சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அடுத்த வருடம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்