வௌிநாட்டு வேலைவாய்பிற்காக குடும்பப் பின்னணி அறிக்கை சமர்பிக்கத்தேவையில்லை

வௌிநாட்டு வேலைவாய்பிற்காக குடும்பப் பின்னணி அறிக்கை சமர்பிக்கத்தேவையில்லை

வௌிநாட்டு வேலைவாய்பிற்காக குடும்பப் பின்னணி அறிக்கை சமர்பிக்கத்தேவையில்லை

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 6:39 pm

வௌிநாட்டு வேலைவாய்பிற்காக பெண்களை அனுப்பும் போது கட்டாயமாக முன்வைக்க வேண்டிய குடும்பப் பின்னணி அறிக்கையை அடுத்த வருடம் முதல் ரத்துச் செய்தாக வௌிநாட்டு வேலைவாய்யு பணியம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக அந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டது.

வெளிநாட்டு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் பல முக்கிய விடயங்களை முன்வைத்தது.

2013 ஆம் ஆண்டு வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு வௌியிட்ட இரண்டு சுற்று நிருபங்களும் அதில் உள்ளடங்குகின்றன.

அதில் ஒரு சுற்றுநிருபம் பதிவு செய்யப்பட்ட முகவர் நிறுவனங்கள் தொடர்பில் வௌியிடப்பட்டதுடன், மற்றைய சுற்றுநிருபம் பிரதேச செயலாளர்களுக்காக வௌியிடப்பட்டது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சுற்றுநிருபம் மூலம் வீட்டுப் பணிப்பெண்களுக்காக விண்ணப்பிக்கும் அனைத்துப் பெண்களும் தமது குடும்ப பின்னணி அறிக்கையொன்றை சமர்பிப்பது கட்டாயமாகும்.

குறித்த பெண்களின் பிள்ளைகளது பாதுகாப்பு மற்றும் அவர்களை பராமறிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது அந்த அறிக்கையை கோரியமையின் நோக்கமாகும்.

ஐந்து வயதிற்கு குறைவான பிள்ளைகள் உள்ள பெண்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வதை தடுப்பது அந்த திட்டத்தின் இலக்காக இருந்தது.

ஐந்து வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் பெண்கள் வௌிநாடு செல்ல வேண்டுமாயின், பிள்ளைகளை பராமரிப்பதற்கு திருப்தி அடைய முடியுமான முறைகளை முன்வைப்பது கட்டாயமாகும்.

அத்துடன் முதல் முறையாக வௌிநாட்டிற்கு தொழிலுக்கு செல்வதாயின் 55 வயதிற்கு குறைவானவராக இருக்க வேண்டும்.

25 வயத்திற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாத்திரமே சவூதி அரேபியாவிற்கு தொழிலுக்கு செல்ல முடியும் என்பதுடன், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வேண்டுமாயின் 23 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஏனைய நாடுகளுக்கு செல்வதாயின் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

குடும்ப பின்புல அறிக்கைக்கு கிராம சேவை உத்தியேகத்தர், குடும்ப நல சுகாதார அதிகாரி, தொழில் முகவர் மற்றும் பிள்ளையின் பாதுகாவலர் அல்லது பெண்ணின் கணவன் ஆகியோரிக் அனுமதி அவசியமாகும்.

எனினும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் இடம்பெயர்வு மற்றும் தொடர்பாடல் அபிவிருத்தி உத்தியோத்தரே இறுதி தீர்மானத்தை எடுப்பார்.

இவ்வாறு சட்டத்தை கடுமையாக்கியமையின் காரணமாக 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014 ஆம் ஆண்டு பெண்கள் தொழில்வாய்பிற்காக செல்லும் எண்ணிக்கை 6.4 % இனால் குறைவடைந்துள்ளதாக வௌிநாட்ட வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா குடும் அறிக்கை பெறவேண்டியது அவசியம் எனவும் அவசியமில்லை என எவரேனும் கூறினால் அது தவறு எனவும் கருத்துத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்