விஜய்க்கு போட்டி இனி நான் தான்: எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய்க்கு போட்டி இனி நான் தான்: எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய்க்கு போட்டி இனி நான் தான்: எஸ்.ஏ.சந்திரசேகர்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 9:38 am

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் ‘நையப்புடை’ படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக பிரதான வேடமேற்று நடிக்க, பா.விஜய். சாந்தினி, உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுகவிழா சென்னையில் நடந்தது.

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்ததாவது,

[quote] இப்படத்தில் என்னை வைத்து விஜயகிரண் ஆக்ஷன் செய்ய வைத்துள்ளார். காமெடி செய்ய வைத்துள்ளார். நடனம் ஆடவைத்துள்ளார், குழந்தைகளோடு வயது மறந்து நடிக்க வைத்துள்ளார். இப்படி திறமையாக வேலை வாங்கினார் விஜயகிரண். என்னை நடிகராக்கியுள்ள இந்த ‘நையப்புடை’ படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம். இதில் என்னை சண்டையிடும் திறமைசாலியாக காட்டி இருக்கிறார்கள். கயிற்றில் கட்டி தொங்க விட்டு சாகசம் செய்ய வைத்தனர். படமாக்கிய பிறகு அதை பார்க்க எனக்கே ஆச்சர்யர்மாக இருந்தது. இந்தபடம் வெளியானதும் விஜய்க்கு நான் தான் போட்டியாக இருப்பேன் என்று நினைக்கிறேன். [/quote]

நிகழ்ச்சியில் கலைப்புலி தாணு, கவிஞர் பா.விஜய், இயக்குனர் விஜய கிரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்