வவுனியாவில் சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்

வவுனியாவில் சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்

வவுனியாவில் சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 7:01 pm

வவுனியாவில் செய்தி சேகரிக்க சென்ற சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் வவுனியா நகர சபையினரால் இன்று முற்பகல் அகற்றப்பட்டது.

இதன் போது நகர சபை ஊழியர்களுக்கும், வர்த்தக நிறுவனத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை படம்பிடித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன் மீது வர்த்தகர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரின் புகைப்படக்கருவிக்கும் சேதம் விளைவிக்க முற்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சுதந்திர ஊடகவியலாளர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செயப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்