யாழ் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

யாழ் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

யாழ் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 5:08 pm

தமது விடுதலையை வலியுறுத்தி யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

பண்டிக்கைக்காலத்தை முன்னிட்டு தமது விடுதலையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்று காலை உணவை பகிஷ்கரித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் உணவுத் தவிர்ப்பு குறித்து சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தூதரக அதிகாரிகள் சிலர் சிறைச்சாலைக்கு சென்று நிலைமையை கேட்டறிந்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் உணவுத் தவிர்ப்பு குறித்து யாழ் இந்திய துணைத் தூதுவர் ஏ. நடராஜனுடன் தொடர்புகொண்டு நியூஸ்பெஸ்ட் வினவியது.

இதேவேளை, இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்தும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவரிடம் வினவப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்