நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் மலிங்க இன்றி களமிறங்கும் இலங்கை அணி

நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் மலிங்க இன்றி களமிறங்கும் இலங்கை அணி

நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் மலிங்க இன்றி களமிறங்கும் இலங்கை அணி

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 5:04 pm

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (26) கிறிஸ்சர்ச்சில் நடக்கிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணியில் லசித் மலிங்க இடம் பெற்றுள்ளார். கடந்த ஒக்டோபர்-நவம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற தொடரின்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இந்த காயம் இன்னும் முழுவதும் குணமடையவில்லை. இதனால் அவர் 26 ஆம் திகதி இடம்பெறும் முதல் போட்டியிலும், 28 ஆம் திகதி நடக்கும் 2 ஆவது போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் டி20 போட்டிகளிலும் இவர் கலந்து கொள்வதில் சந்தேகம் நிலவுகின்றது. எனவே இலங்கை டி20 அணிக்கு வேறு ஒருவர் தலைமைப் பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலிங்கவிற்குப் பதிலாக திசாரா பெரேராவை இலங்கை அணி மாற்று வீரராக அழைத்துச் சென்றுள்ளது. மலிங்க விளையாடாதது இலங்கை அணிக்கு பெரிய இழப்பு என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்