தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன நெரிசல்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 8:06 pm

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை கொடகம வெளியேற்றத்திற்கு அருகில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எதிர்வரும் பண்டிகைக்கால நீண்ட விடுமுறையை ​முன்னிட்டு கதிர்காமம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சுற்றுலாவில் ஈடுபடுகின்றவர்கள் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துகின்றமையே இதற்குக் காரணமாகும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனால் கொடகம வௌியேற்ற வாயிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு வாகன நெரிசல் காணப்பட்டது.

இதனையடுத்து வாகன நெரிசலை தணிப்பதற்காக இமதூவ, கொக்மாதூவ மற்றும் பின்னதூவ ஆகிய வௌியேற்ற வாயில்களை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதன்பின்னர் இன்று பிற்பகல் அளவில் வாகன நெரிசல் வழமைக்குத் திரும்பியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்