துருக்கி படகு விபத்தில் 19 அகதிகள் உயிரிழப்பு

துருக்கி படகு விபத்தில் 19 அகதிகள் உயிரிழப்பு

துருக்கி படகு விபத்தில் 19 அகதிகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 8:13 pm

துருக்கி அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் லேஸ்போஸ் தீவுக்கு சென்று கொண்டிருந்த அந்த படகு துருக்கியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடற்பகுதியில் பாதேமில் கடற்கரை அருகில் விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த துருக்கி கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவார்கள்.

கிழக்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவிற்கும் அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு அகதிகளாக செல்பவர்கள் கடல் மார்க்கமாக உரிய ஆவணம் இல்லாமல் ஏஜண்டுகள் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ படகு மூலம் தப்பிச் செல்கின்றனர். இதில் ஏராளமானோர் உயிரிழந்து வருவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்